பாபநாசம்,ஜூலை 30: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியவருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கணபதியக்ரஹாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (44). இவர் பண்டாரவாடை சூபி நகரைச் சேர்ந்த பஷீர்அகம்மது என்பவரிடம் தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருமாறு ரூ.50 ஆயிரம் கொடுத்தாராம். ஆனால் பஷீர்அகம்மது வேலை வாங்கித் தராமல் சண்முகத்தை ஏமாற்றி வந்தாராம். இதுகுறித்து பாபநாசம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சண்முகம். இதைத் தொடர்ந்து பஷீர் அகம்மதுக்கு ஒரு வருட சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதித் துறை நடுவர்.