ஏப். 19-ல் மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் சப்தஸ்தான பெரு விழா

மயிலாடுதுறை, ஏப். 15: திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான, மயிலாடுதுறை அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு ஐயாறப்பர் கோயில் சப்தஸ்தான பெருவிழா ஏப் 19-ல் நடைபெறவுள்ளது.      மயிலாடுதுறை அருள்மிகு அறம

மயிலாடுதுறை, ஏப். 15: திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான, மயிலாடுதுறை அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு ஐயாறப்பர் கோயில் சப்தஸ்தான பெருவிழா ஏப் 19-ல் நடைபெறவுள்ளது.

     மயிலாடுதுறை அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில் சப்தஸ்தான பெரு விழா, திருவாவடுதுறை ஆதீனம் 23-வது குரு மகா  சன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் அருளாசியுடன் ஆண்டுதோறும் நடைபெறுவதும் வழக்கம்.

     நிகழாண்டு இவ்விழா கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, சிறப்பு வழிபாடுகள், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் அனுக்ஞை  ஆகியவை நடைபெற்றன.

     8-ம் தேதி கொடியேற்றமும், தொடர்ந்து ஐயாறப்பர், பஞ்ச மூர்த்திகளுடன் வீதியுலாவும் நடைபெற்றது. 12-ம் தேதி ஆத்ம பூஜையும், சகோபுர தரிசனமும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்றன.      விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர், கூறைநாடு அருள்மிகு சாந்தநாயகி  உடனுறை அருள்மிகு புனுகீசுவரர், சித்தர்காடு அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர், மூவலூர் அருள்மிகு மங்கள செüந்தரநாயகி உடனுறை மர்க்க சாகாயசுவாமி, திருக்காயிலாய பரம்பரை தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான  அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை  அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆகிய திருக்கோயில்களிலிருந்து சுவாமிகள்  புறப்பாடு நடைபெற்று  மாயூரநாதர் கோயிலில்  சங்கமிங்கும்.

    அங்கு அருள்மிகு அபயாம்பிகை உடனுறை அருள்மிகு மாயூரநாத சுவாமி  அனைத்து சுவாமிகளின் முன், எழுந்தருள சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com