சுடச்சுட

  

  கரூர், ஜூலை 13: கரூரில், பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் இன மாணவ, மாணவிகள் பரிசு பெற விண்ணப்பிக்கலாம்.

     கரூர் மாவட்டத்தில் 2010-11 ஆம் கல்வியாண்டில் வேட்டுவக் கவுண்டர்கள் இனத்தைச் சேர்ந்த 10, 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலையூர் காளி கல்வி பவுண்டேசன் சார்பில்  பசுபதிபாளையம் டிபி மஹாலில் பரிசளிப்பு விழா இம்மாதக் கடைசியில் நடைபெற உள்ளது.

     எனவே, தகுதியுடைய மாணவ, மாணவிகள் தங்களுடைய பெயர், முகவரி, செல்போன் எண், பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆகியவற்றின் நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் அஞ்சல் மூலம் வரும் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

     தகுதியுள்ள மாணவர்களில் முதல் 10 பேருக்கு பரிசும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும் என தலையூர் காளி கல்வி பவுண்டேசன் தலைவர் கணக்கு கே. சுப்பிரமணியம், செயலர் பி. மணியம் பிச்சைமுத்து மற்றும் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai