Enable Javscript for better performance
இசை உலகில் புதிய கருவி \\\"அறுமுகனம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால், நவ. 13: காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற ஸப்தஸ்வரம் நிகழ்ச்சியில் உலகிலேயே எங்குமில்லாத அறுமுகனம் என்கிற புது இசைக் கருவி வாசிக்கப்பட்டது.

        காரைக்கால் அம்மையார் கலையரங்கில் ஸப்தஸ்வரம் இசைப் பேரவை என்கிற அமைப்பு மூலம் மாதம்தோறும் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் 309-வது இசை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

       காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான காரக்குறிச்சி ஏ. ரவி, காரக்குறிச்சியை சேர்ந்த என். சியமளா, ஏ. லட்சுமி ஆகியோர் வீணை இசைத்தனர்.

       புதுவையை சேர்ந்த எஸ். கோபகுமார் மிருதங்கம் வாசிக்க, இவரது கண்டுபிடிப்பில் உருவான தபேலா வடிவத்திலான 6 வித இசைக் கருவிகள் ஒருங்கிணைந்த அறுமுகனம் என்கிற இசைக் கருவியை புதுவை பி.ஆர். அரவிந்த் கௌசிக் என்பவர் வாசித்தார்.

       அறுமுகனம் என்கிற கருவியை உலகிலேயே முதல் முறையாக எஸ். கோபகுமார் கண்டுபிடித்து, ஆறு விதமான நாதத்தை பரப்பும் வகையில் கருவியை உருவாக்கினார். அவருக்கு இக் கருவி உருவாக்கப்பட்டதன் மூலம் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இக் கருவியை அவர் வாசித்து வருவதாகவும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.   நிகழ்ச்சி தொடக்க விழாவுக்கு இசைப் பேரவைத் தலைவர் காரை சுப்பையா தலைமை வகித்தார். பேரவையின் சார்பில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி நோக்கம் குறித்து செயலர் கேசவசாமி விளக்கினார். கே. சாய்கிருஷ்ணன் இசை விமர்சனம் செய்தார். முடிவில் ஏ. பஞ்சவர்ணம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai