அரியலூர், பிப். 10: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திலுள்ள சாத்தமங்கலத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத் துறை, கீழப்பழூர் கால்நடை மருந்தகம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவு ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தின.
சாத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு கீழப்பழூர் கால்நடை மருந்தக மருத்துவர் தி. செல்லப்பிள்ளை தலைமை வகித்தார். கால்நடை மருத்துவர்கள் ஏலாக்குறிச்சி வேல்முருகன், திருமானூர் எஸ்.ஆர். சுரேஸ், இலந்தைகூடம் ம. பாஸ்கரன், காமரசவல்லி ராஜதுரை, அரியலூர் ஆர். முருகேசன், கீழப்பழூர் தி. செல்லப்பாண்டி, மருத்துவ ஆய்வாளர்கள் பி. செல்வி, எஸ். ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் கால்நடைகளுக்குச் சிகிச்சையளித்தனர்.
முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, நோய்த் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள், கால்நடை மருந்தக உதவி ஆய்வாளர் கி. பழனிமுத்து, தொடர்புப் பணியாளர் எஸ். சௌந்திரராஜன் உள்ளிட்டோர் செய்திருóந்தனர்.
சாத்தமங்கலம் ஊராட்சித் தலைவர் ம. கண்ணகி வரவேற்றார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் அ. வேலுசாமி நன்றி கூறினார்.