கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
கரூர், பிப். 10: கரூர் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களுக்கு அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், க. பரமத்தி வட்டார வள மையத்திற்குள்பட்ட கார்வழி, க. பரமத்தி, தென்னிலை, புன்னம்சத்திரம் ஆகிய குறுவள மையங்களில் கிராமக் கல்விக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்டங்கள், செயல்பாடுகள், கிராமக் கல்வி உறுப்பினர்களின் பங்கு, கடமைகள், மாணவர்களின் உரிமைகள், பள்ளிக்குத் தேவைப்படும் உள் கட்டமைப்பு வசதிகள், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள், பள்ளியை மேம்படுத்துதல், பள்ளியின் சுகாதாரம், இன்றைய கற்றல் கற்பித்தல் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.
ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் அண்ணாவி, ஆசிரியர் பயிற்றுநர்கள் ஈஸ்வரி, செல்வி, கல்யாணி, அனுராதா, ஜோதி, கல்யாணசுந்தரம், கோபிநாதன், செல்வகுமார், சுபா, பிரேம்குமாரி ஆகியோர் செய்தனர்.