அரியலூர், பிப். 10: அரியலூர் அருகே மினி வேன் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திலுள்ள காமரசவல்லி கிராமத்தைச் சேர்ந்தவரின் திருமணம் கல்லங்குறிச்சியிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பங்கேற்றுவிட்டு, சுமார் 30 பேர் மினி வேனில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அரியலூர் அரசு சிமென்ட் ஆலை அருகே மினி வேன் வந்தபோது, முன்னால் சென்ற வாகனத்திற்கு வழிவிடுவதற்காகத் திருப்பியபோது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ஓட்டுநரைத் தவிர, மீதமிருந்த 29 பேரும் காயமடைந்தனர்.
22 பேர் அரியலூர் மருத்துவமனையிலும், கலியபெருமாள் (65), கமலக்கண்ணன், மணிவேல், உள்ளிட்ட 7 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை கலியபெருமாள் உயிரிழந்தார்.
இதுகுறித்து கயர்லாபாத் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.