இலுப்பூர், பிப். 10 : இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிப்பட்டியில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிய கிளையை அந்த வங்கியின் காரைக்குடி முதன்மை மண்டல மேலாளர் பாலசந்தர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இதில், ஊராட்சித் தலைவர்கள் பெரியசாமி, லூர்துசாமி, திருப்பதி, ஒன்றியக் குழு உறுப்பினர் கணேசன், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் அமர்நாத்பாபு, புதுக்கோட்டை வங்கி மேலாளர் ராஜா, விராலிமலை வங்கி மேலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மலைக்குடிப்பட்டி வங்கி கிளை மேலாளர் புவனேஸ்வரி வரவேற்றார். வங்கி காசாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.