தஞ்சாவூர், பிப். 10: தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
செங்கிப்பட்டி அருகேயுள்ள சொரக்குடிப்பட்டியைச் சேர்ந்தவர் என். செல்வராஜ் (38). இவர் சானூரப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி இவர் மீது மோதியது. இதில், செல்வராஜ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.