11 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம்: அதிமுக முடிவு

அரியலூர், பிப். 10: முதல்வர் ஜெயலலிதாவின் 64-வது பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் 11 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைப்பது என மாவட்ட அதிமுக முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம் அரிய
Published on
Updated on
2 min read

அரியலூர், பிப். 10: முதல்வர் ஜெயலலிதாவின் 64-வது பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் 11 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைப்பது என மாவட்ட அதிமுக முடிவு செய்துள்ளது.

இதற்கான தீர்மானம் அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:

அரியலூர் அரசு சிமென்ட் தொழில்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு, அரியலூரில் மாவட்டத் தலைமை மருத்துவமனை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட வேளாண் அலுவலகங்கள், மருதையாற்றில் பாலம் கட்ட ரூ. 7.50 கோடி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, எல்லா கிராமங்களிலும் கட்சி கொடியேற்றி, இனிப்புகளை வழங்குதல், திருக்கோயில்களில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல், ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குதல், மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, அரியலூர் எம்எல்ஏவும், மாவட்ட அதிமுக செயலருமான துரை. மணிவேல் பேசியது:

முதல்வரின் பிறந்த நாளையொட்டி, அரியலூர் மாவட்டத்தில் 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது. அவர்களுக்கு சீர்வரிசை பாத்திரங்கள், வெள்ளாடு, பசுங்கன்று போன்றவையும் வழங்கப்பட உள்ளன.

மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களிலும் அதிமுகவினர் புதிய கொடி கம்பங்களை நட்டு, கொடியேற்றி, முதல்வரின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். மாவட்ட அதிமுக சார்பில் 100 ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்களும், சலவைத் தொழிலாளர்களுக்கு சலவை இயந்திரங்களும் வழங்கப்பட உள்ளன.

நலிவடைந்த அதிமுக கிளைச் செயலர்கள் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் ஏதேனும் தொழில் செய்து கொள்ளும் வகையில், தலா ரூ. 10,000 வீதம் தொகை வழங்கப்பட உள்ளது என்றார்  துரை. மணிவேல்.

இந்தக் கூட்டத்துக்கு தொகுதிச் செயலர்கள் அரியலூர் பி. கணேசன், மாவட்ட ஜெ. பேரவை செயலர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே. சின்னப்பன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தனலட்சுமி கிருஸ்ணமூர்த்தி, ஒன்றியத் தலைவர்கள் அரியலூர் வை.கோ.சி. கவிதா சிவபெருமாள், திருமானூர் நா. சீனிவாசன், ஜயங்கொண்டம் கண்ணகி குப்புசாமி, நகரச் செயலர்கள் அரியலூர் ஏ.எஸ்.எம். கண்ணன், ஜயங்கொண்டம் நகரச் செயலர் செல்வராஜ்,  ஒன்றியச் செயலர்கள் அரியலூர் செல்வராஜ், திருமானூர் ராசி மனோகரன், ஜயங்கொண்டம் கல்யாணசுந்தரம், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர்கள் அரியலூர் தாமரை ராஜேந்திரன், ஜயங்கொண்டம் தண்டபாணி, திருமானூர் குமாரவேல், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் ராஜா, மாவட்ட மீனவரணிச் செயலர் நேசனல் நாகராஜன், நகராட்சி உறுப்பினர் சிவஞானம், அதிமுக நிர்வாகிகள் வழக்குரைஞர் வெங்கடாசலபதி, ஆப்டிகல் ரவி, ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, ஜயங்கொண்டம் தொகுதி செயலரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான ராமஜயலிங்கம் வரவேற்றார். மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் அன்பழகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.