நாகையில் அதிபத்த நாயனார் ஐதீக விழா

 நாகப்பட்டினம், செப். 13: நாகையில் அதிபத்த நாயனார் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் ஐதீக விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.  63 நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படும் அதிபத்த நாயனார், நாகையில் உள்ள

 நாகப்பட்டினம், செப். 13: நாகையில் அதிபத்த நாயனார் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் ஐதீக விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

 63 நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படும் அதிபத்த நாயனார், நாகையில் உள்ள நம்பியார் நகரில் அவதரித்து, சிவத் தொண்டே பிரதானம் என வாழ்ந்து நாயன்மார்களில் ஒருவர்.

 தனது வலையில் சிக்கும் முதல் மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம் கொண்டிருந்த அதிபத்தருக்கு கடும் வறுமை ஏற்பட்டதாம். அப்போது, அவரது வலையில் தங்க மீன் ஒன்று முதல் மீனாக சிக்கியுள்ளது.

 தனது வறுமையைப் பொருட்படுத்தாமல், தான் கொண்ட கொள்கையிலிருந்து சிறிதும் வழுவாமல், தனது வலையில் கிடைத்த தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணம் எனக் கூறி அதிபத்தர் கடலில் விட்டுள்ளார்.

 அப்போது, சிவபெருமானும், உமாதேவியும் அவருக்குக் காட்சியளித்தனர் என்பது ஐதீகம். இந்த ஐதீக நிகழ்வை போற்றும் விழா நாகையில் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டுக்கான விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

 இதையொட்டி, அருள்மிகு நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகண சுவாமி வீதியுலா வந்து, நாகை புதிய கடற்கரையில் காட்சியளித்தார். இதைத் தொடர்ந்து, சீர் வரிசை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், அதிபத்த நாயனார் சிலையும், தங்க மீனும் ஒரு படகில் வைத்து கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டு, ஐதீகப்படி அதிபத்த நாயனார் தங்க மீனை கடலில் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com