Enable Javscript for better performance
வேலை தேடும் இளைஞர்கள் கவனத்துக்கு...- Dinamani

சுடச்சுட

    

    வேலை தேடும் இளைஞர்கள் கவனத்துக்கு...

    By DIN  |   Published on : 14th September 2019 06:41 AM  |   அ+அ அ-   |    |  

    திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் மாநில தொழில்நெறி வழிகாட்டி மையத்தின் சேவைகளை பெற்று பயன்பெறலாம் என ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களுக்குரிய பொருத்தமான தொழில்நெறியை தேர்வு செய்யவும், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை பெறவும், தமிழ்நாடு வேலைவாய்ப்புப் பயிற்சி துறை மூலம் மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. 
     இந்த மையத்தின் மூலம், வேலைதேடும் இளைஞர்களுக்கான உளவியல் பிரச்னைகளுக்கு தீர்வு, போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வேலைவாய்ப்பு முகாம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கவுள்ளன. இந்த சேவைகளைப் பெற 044-22500134 என்ற தொலைபேசி எண் அல்லது

    என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த வசதியை பயன்படுத்தி வேலை பெறவும், புதிய தொழில் தொடங்கவும் முயற்சிக்க வேண்டும்.

    kattana sevai