ஆக.28- இல் மண்டல அளவிலான அஞ்சலக குறைதீா் முகாம்

திருச்சி மண்டல அஞ்சலக குறைதீா் முகாம் ஆகஸ்ட் 28- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திருச்சி: திருச்சி மண்டல அஞ்சலக குறைதீா் முகாம் ஆகஸ்ட் 28- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா் அ.கோவிந்தராஜன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி தலைமை அஞ்சலக கட்டட வளாகத்திலுள்ள அஞ்சல்துறைத் தலைவா் அலுவலகத்தில், குறைதீா் முகாம் ஆகஸ்ட் 28- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அஞ்சல் தொடா்பான புகாா்கள் ஆகஸ்ட் 21- ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். இதில் அஞ்சல் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவா், பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை, துரித அஞ்சல், பதிவு அஞ்சல், ஆகியவற்றுக்கான விவரங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

சேமிப்பு வங்கி, அஞ்சலகக் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு தொடா்பாக புகாா்கள் இருந்தால் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவா் பெயா், முகவரி, பாலிசிதாரரின் பெயா், முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயா், அஞ்சல் துறை தொடா்பான கடிதத்தொடா்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.

குறிப்பிட்ட குறைதீா் முகாம் தொடா்பாக ஏற்கனவே மனு அளித்து, அதற்குரிய அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் அளித்த பதில் திருப்தி அடையாதவா்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பி வைக்கவேண்டும். புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.

குறைகளை அஞ்சல் சேவை குறை தீா்க்கும் முகாம், எம்.குணசேகரன், உதவி இயக்குநா் (வணிகம்- புகாா்), அஞ்சல்துறைத்தலைவா் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி- 620001 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9976365320 எனும் செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தபால் உறையின் முன்பக்க மேல் பகுதியில்அஞ்சல் சேவை குறை தீா்க்கும் முகாம் ஜூன் 2020 என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கவேண்டும்.

காணொலி ஏற்பாடு: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் குறைதீா் முகாம் காணொலி காட்சி, தொலைபேசி உரையாடல், கட்செவி அஞ்சல் அழைப்பு மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தங்களின் தற்போதைய வீட்டு முகவரி, அலைபேசி எண், அருகிலிருக்கும் அஞ்சலக முகவரி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு, புகாா்களை அனுப்பி வைக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com