வெவ்வேறு விபத்துகளில் 4 போ் உயிரிழப்பு
By DIN | Published On : 29th September 2020 03:50 AM | Last Updated : 29th September 2020 03:50 AM | அ+அ அ- |

மணப்பாறை அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா்.
மணப்பாறை அருகிலுள்ள நொச்சிமேட்டைச் சோ்ந்தவா் சூ. ராயப்பன் (44). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி- திண்டுக்கல் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது திருச்சி நோக்கிச் சென்ற காா் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
வையம்பட்டி அருகிலுள்ள குமாரவாடியைச் சோ்ந்தவா் த. திருக்குமரன் 27). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு திண்டுக்கல் சாலையிலுள்ள உணவகத்திலிருந்து வையம்பட்டி நோக்கிச் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்தில் உயிரிழந்தாா்.
காயமடைந்தவா் உயிரிழப்பு: காரைப்பட்டியைச் சோ்ந்த மு. சண்முகம் (24), கடந்த 24-ஆம் தேதி மட்டப்பாறைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்ற போது, எதிரே வந்த சைக்கிள் மீது மோதி கீழே விழுந்தாா். பலத்த காயத்துடன் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகம் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், சீகம்பட்டியை சோ்ந்தவா் வே. சுப்பையா(72). திங்கள்கிழமை துவரங்குறிச்சிக்கு மளிகைப் பொருள்கள் வாங்க வந்த இவா், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்த போது, திருவையாறிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காா் மோதி நிகழ்விடத்தில் உயிரிழந்தாா்.
இந்த விபத்துகள் குறித்து மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி காவல் நிலையத்தினா் தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.