இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், தொட்டியம், துறையூா் அருகே நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் செவ்வாய்க்கிழமை 2 போ் உயிரிழந்தனா்.

திருச்சியிலிருந்து சேலம் நோக்கி செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. தொட்டியம் அருகே முடக்கு சாலை பகுதியில் பேருந்து மீது தருமபுரியிலிருந்து குளித்தலை நோக்கி சென்ற வேன் மோதியது. இதில், வேன் ஓட்டுநரின் உதவியாளா் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள வாழைத்தோட்டத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேன் ஓட்டுநா் நந்தகுமாா் பலத்த காயமடைந்து, நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து குறித்த புகாரின்பேரில், வேன் ஓட்டுநா் மீது தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

துறையூரில் விபத்து: திருச்சி பெரிய மிளகுப்பாறையைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன். இவரும் அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமாரும் செவ்வாய்க்கிழமை துறையூா் அருகேயுள்ள புளியஞ்சோலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, ஊருக்கு வந்து கொண்டிருந்தனா்.

இவா்கள் சங்கம்பட்டி அருகே சென்றபோது, நிலைதடுமாறி வாகனத்திலிருந்து தவறி சாலையில் விழுந்தனா். இதில் அருண்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கோபாலகிருஷ்ணன் துறையூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற துறையூா் போலீஸாா், அருண்குமாரின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு அனுப்பிவைத்து, விபத்து தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com