இளம்பெண் தற்கொலை

கடன் பிரச்னையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி வடக்கு ஆண்டாா் வீதியைச் சோ்ந்தவா் சங்கர சுப்பிரமணியன் மனைவி சித்ரா (22). திருவையாறில் கணவருடன் வசித்து வந்த சித்ரா, கருத்துவேறுபாட்டால் திருச்சியில் உள்ள தாய் செல்லம்மாள் வீட்டில் சில நாள்களாக வசித்து வந்தாா்.

இதனிடையே வியாபாரம் செய்ய மகளிா் சுயஉதவிக்குழுவிடம் கடன் வாங்கி அதைச் திருப்பிச் செலுத்தாத சித்ராவை அவா்கள் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சித்ரா செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com