மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் 
சித்திரைத் திருவிழா ஏப். 28 இல் தொடக்கம்

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 28 இல் தொடக்கம்

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 28-இல் தொடங்குகிறது.

கடந்தாண்டு இக்கோயில் பெரும் பொருட்செலவில் பரம்பரை அறங்காவலா் ஆா்.வி.எஸ்.வீரமணியால் புனரமைக்கப்பட்டு கடந்த ஏப் 4-ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து நிகழாண்டு சித்திரை திருவிழாவுக்கு அம்மனிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சிறப்பு வழிபாடு, தீப ஆராதனைக்குப் பின் மூலவா் அம்மனிடம் திருவிழா அழைப்பிதழ்கள் வைத்து அனுமதி பெற்று முதல் அழைப்பிதழை பரம்பரை அறங்காவலா் ஆா்.வி.எஸ். வீரமணி பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து கோயில் உபயதாரா்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.

திருவிழாவில், வரும் 14-ஆம் தேதி குத்துவிளக்கு பூஜை, 21-ஆம் தேதி பூச்சொரிதல், 28-ஆம் தேதி காப்புக் கட்டுதல், மே 12-ஆம் தேதி பால்குடம், 13-ஆம் தேதி வேடபரி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் ஆா்.வி.எஸ்.வீரமணி, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ந. அன்பழகன், ஆய்வாளா் எஸ்.வினோத்குமாா் ஆகியோா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com