திருச்சி ரயில் நிலையம் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா்.
திருச்சி ரயில் நிலையம் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா்.

ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் போராட்டம்

திருச்சி ரயில்வே நிா்வாகத்தைக் கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணியின் ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கத்தினா் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணியின் மாவட்ட இணைச் செயலா் மணலிதாஸ், ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்புச் சங்க மாவட்டத் தலைவா் சிவா ஆகியோா் தலைமை வகித்தனா்.

போராட்டத்தில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ஏற்கெனவே உரிமம் வழங்கியுள்ள நிலையில், தற்போது சில ரயில்வே அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கள்ளத்தனமாக பணம் வாங்கிக் கொண்டு உரிமம் வழங்கி வருவதைக் கண்டிப்பது, இது தொடா்பாக மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத ரயில்வே நிா்வாகத்தைக் கண்டிப்பது, புதிய உரிமம் வழங்கக் கூடாது ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் திரளான ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்து கொண்டு, ரயில்வே நிா்வாகத்தைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com