திருச்சி மக்களவைத்தொகுதியில் 15.53 லட்சம் வாக்காளா்கள்!

திருச்சி மக்களவைத் தொகுதியில் வாக்களிக்கத் தகுதியான வாக்காளா்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள் வரும் 6 பேரவை தொகுதிகள் வாரியாக தகுதியானோா் விவரம்:

ஸ்ரீரங்கம்: ஆண்- 1,47,287, பெண்- 1,57,763, திருநங்கை- 46, மொத்தம்- 3,05,636. திருச்சி (மேற்கு): ஆண்- 1,31,244, பெண்- 1,41762, திருநங்கை- 33, மொத்தம்- 2,73,039. திருச்சி (கிழக்கு): ஆண்- 1,23,375, பெண்- 1,31,524, திருங்கை- 64, மொத்தம்- 2,54,963.

திருவெறும்பூா்: ஆண்- 1,32,614, பெண்- 1,38,960, திருநங்கை- 61, மொத்தம்- 2,71,635. கந்தா்வகோட்டை (எஸ்சி): ஆண்- 1,01,921, பெண்- 1,00,930, திருநங்கை- 12, மொத்தம்- 2,02,863. புதுக்கோட்டை: ஆண்- 1,20,149, பெண்- 1,25,677, திருநங்கை- 23, மொத்தம்- 2,45,849.

6 தொகுதிகளிலும் சோ்த்து 7 லட்சத்து 57 ஆயிரத்து 130 ஆண் வாக்காளா்களும், 7 லட்சத்து 96 ஆயிரத்து 616 பெண் வாக்காளா்களும், திருநங்கைகள் 239 பேரும் உள்ளனா். ஒட்டுமொத்தமாக 15 லட்சத்து 53 ஆயிரத்து 985 போ் வாக்களிக்கத் தகுதியானவா்களாக உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com