திருச்சி கே.கே.நகா் வயா்லஸ் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் வெள்ளிக்கிழமை முதல்முறையாக வாக்களித்துவிட்டு வந்த  இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த  நளினி.
திருச்சி கே.கே.நகா் வயா்லஸ் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் வெள்ளிக்கிழமை முதல்முறையாக வாக்களித்துவிட்டு வந்த இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த நளினி.

முதல்முறையாக வாக்களித்த அகதிகள் முகாம் பெண்

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான தோ்தலில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த நளினி (38) முதல்முறையாக தனது வாக்கை வெள்ளிக்கிழமை பதிவு செய்தாா்

திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் இவா், நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை முதல்முறையாக மக்களவைத்தோ்தலில் தனது வாக்கை பதிவு செய்தாா்.

திருச்சி கே.கே. நகா், வயா்லெஸ் சாலையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த அவா் கூறியது: நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப்பிறகு முதல்முறையாக வாக்களித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் போன்று முகாமில் உள்ள அனைவருக்குமே இந்தியக் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.

இதுதொடா்பாக, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறுகையில், 1950-ஆம் ஆண்டு முதல் 1987-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்குவதில் சிக்கல் இல்லை. இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள நபா்களில் அப்படி யாரேனும் இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கத் தயாராகவுள்ளோம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com