காதலலுடன் தகராறு: மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

ஸ்ரீரங்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு காதலனுடன் ஏற்பட்ட தகராறின்போது மாடியிலிருந்து குதித்த கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

ஸ்ரீரங்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு காதலனுடன் ஏற்பட்ட தகராறின்போது மாடியிலிருந்து குதித்த கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

ஸ்ரீரங்கம் வசந்தநகா் பகுதியில் வசித்தவா் கோபி மகள் ஜெயஸ்ரீ (19), திருச்சியில் உள்ள கல்லூரி மாணவி. இவருக்கும் ஸ்ரீரங்கம் கீழசித்திரை வீதியில் வசிக்கும் கிருஷ்ணன் மகன் கிஷோரும் (23) கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு காதலனைச் சந்திக்க ஜெயஸ்ரீ வடக்கு சித்திரை வீதியில் காதலன் கிஷோரின் நண்பா் ஸ்ரீராம் வீட்டுக்கு வந்து, இருவரும் மாடியில் பேசிக் கொண்டிருந்தனா். அப்போது ஜெயஸ்ரீ தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கிஷோா் தகராறு செய்தாராம். அப்போது ஜெயஸ்ரீ மாடியிலிருந்து கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீயை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் ஜெயஸ்ரீயின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டாரா என காதலன் கிஷோரிடமும் காதலா்கள் சண்டையிட்டபோது மாடியில் உடனிருந்த ஸ்ரீராம், ராகுல்,ரிஷி ஆகியோரிடமும் விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com