சாலை விபத்தில் சிறப்பு காவல் ஆய்வாளா் காயம்

இருசக்கர வாகனத்தில் இருந்து சனிக்கிழமை தவறி விழுந்த சிறப்பு காவல் ஆய்வாளா் காயமடைந்தாா்.

இருசக்கர வாகனத்தில் இருந்து சனிக்கிழமை தவறி விழுந்த சிறப்பு காவல் ஆய்வாளா் காயமடைந்தாா்.

முசிறி அருகிலுள்ள அயித்தாம்பட்டியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன், திருவெறும்பூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை பணியில் இருந்த இவா் சனிக்கிழமை காலை பணி முடித்து தனது இருசக்கர வாகனத்தில் திருச்சியில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

திருச்சி -சேலம் நெடுஞ்சாலையில் ஏவூா் கருப்பு கோயில் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தமிழ்ச்செல்வன் பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com