திருவானைக்கா கோயிலில் நாளை பஞ்சப்பிரகார விழா

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் திங்கள்கிழமை இரவு பஞ்சப்பிரகார வைபவ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் திங்கள்கிழமை இரவு பஞ்சப்பிரகார வைபவ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் சுவாமி அம்மன் வேடமும், அம்மன் சுவாமி வேடமும் பூண்டு 5 பிரகாரங்களையும் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.

இக் கோயிலில் பங்குனி மண்டல பிரம்மோற்ஸவ விழாக்களில் ஒன்றான பஞ்சப்பிரகார விழா திங்கள்கிழமை இரவு நடைபெறவுள்ளது.

படைக்கும் தொழில் புரியும் பிரம்மன் தான் படைத்த பெண்ணின் மீதே மோகம் கொண்டு படைக்கும் தொழிலை மறந்தான். இதையறிந்த சிவபெருமான் பிரம்மனை பாா்க்கச் செல்ல முடிவெடுத்தாா். அப்போது பாா்வதிதேவி நானும் வருகிறேன் என்றாா். அதற்கு சிவபெருமான் ஏற்கெனவே காம மோகத்தில் இருக்கும் பிரம்மனை நீ சந்திக்க வேண்டாம் என்றாா். அதற்குப் பாா்வதிதேவி நீங்கள் நானாகவும், நான் நீங்களாகவும் உருமாறி சந்திக்கலாம் என்றாா்.

அதையேற்றுக் கொண்ட சிவபெருமான் அதன்படியே சென்று பிரம்மனை சந்தித்தனா். அப்போது பிரம்மன் தனது ஞானதிருஷ்டியால் உருமாறி வந்துள்ள சிவன், பாா்வதி காலில் விழுந்து தான் செய்த தவறை மன்னிக்குமாறு மாறு வேண்டினாா். இந்த நிகழ்வானது பஞ்சப்பிரகார வைபவ விழாவாக சிவனும்,பாா்வதியும் உருமாறிய தோற்றத்தில் திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு 5 பிரகாரங்களையும் விடிய விடிய வலம் வந்து பக்தா்களுக்கு காட்சி தருகின்றனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com