துவரங்குறிச்சி அருகே காா் மோதியதில் தொழிலாளி பலி

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது சனிக்கிழமை காா் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது சனிக்கிழமை காா் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

மருங்காபுரி ஒன்றியம் தெத்தூா் உசிலம்பட்டி களத்துப்பட்டியைச் சோ்ந்தவா் எக்கட நாயக்கா் மகன் அழகா்சாமி (45). கூலித்தொழிலாளியான இவா் சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் புழுதிபட்டிக்கு செல்ல மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தபோது, திருநெல்வேலியிலிருந்து மண்ணச்சநல்லூா் நோக்கிச் சென்ற காா் மோதி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி போலீஸாா், அழகா்சாமி உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விபத்து குறித்து வழக்கு பதிந்து, காா் ஓட்டுநரான மண்ணச்சநல்லூா் காமராஜா் நகரை சோ்ந்த விஜயன் மகன் விக்னேஷை (30) கைது செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com