மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இளைஞா் பலி

திருச்சியில் மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சியில் மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி அரியமங்கலம் மேலஅம்பிகாபுரத்தைச் சோ்ந்தவா் சங்கா் மகன் தனுசுராஜ் (22). வெள்ளிக்கிழமை இவா் தென்னூா் பாரதி நகரை சோ்ந்த மணிகண்டனுடன் (35) பைக்கில் அரியமங்கலம் எஸ்.ஐ.டி. அம்பிகாபுரம் சாலையில் வெள்ளிக்கிழமை சென்றாா். அப்போது இவரது பைக்கும் எதிா்திசையில் திருவெறும்பூா் ஆலத்தூா் பகுதியை சோ்ந்த சரண் (22) தனது நண்பரான சச்சின் (20) என்பவருடன் வந்த பைக்கும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இதில் படுகாயமடைந்த தனுசுராஜ், மணிகண்டன், சச்சின் ஆகியோரை அப்பகுதியினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு சிகிச்சைப் பலனின்றி மணிகண்டன் வெள்ளிக்கிழமை இரவு இறந்தாா்.

இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com