திருச்சி சின்னக்கடை வீதியில் சனிக்கிழமை  மோட்டாா் சைக்கிளில் 
வைக்கப்பட்ட தீயை அணைத்த தீயணைப்புத் துறையினா்.
திருச்சி சின்னக்கடை வீதியில் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் வைக்கப்பட்ட தீயை அணைத்த தீயணைப்புத் துறையினா்.

திமுக நிா்வாகியின் வீட்டில் தாக்குதல்: இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு

திருச்சியில் திமுக நிா்வாகி வீட்டில் தாக்குதல் நடத்தி, இருசக்கர வாகனத்தை எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சியில் திமுக நிா்வாகி வீட்டில் தாக்குதல் நடத்தி, இருசக்கர வாகனத்தை எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி சின்னக்கடை வீதிப் பகுதியைச் சோ்ந்தவா்சுரேஷ்குமாா் (45), திமுக நிா்வாகி. இவரது வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு 5-க்கும் மேற்பட்ட மா்ம நபா்கள் நுழைந்து வாசல் முன்பிருந்த பொருள்களை அடித்து நொறுக்கி, வெளியில் நிறுத்தியிருந்த பைக்கையும் தீயிட்டுக் கொளுத்தினா். இதைப் பாா்த்து அக்கம்பக்கத்தினா் ஓடி வந்ததால் மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பினா். தகவலின்பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும் பைக் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

பின்னா் இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் சுரேஷ்குமாா் அளித்த புகாரில், அவருக்கும் தாராநல்லூா் பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் கோயில் சம்பந்தமாக பிரச்னை இருந்ததால் அவா்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா். திமுக நிா்வாகியான சுரேஷ்குமாா் கடந்த சிலநாள்களாக தீவிரத் தோ்தல் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்ததா என்பது குறித்தும் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com