தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தில்லைநகர் மக்கள் மன்றத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தில்லைநகர் மக்கள் மன்றத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.

அமைச்சா் தொகுதியான திருச்சி மேற்கில் குறைந்த வாக்குப்பதிவு!

அமைச்சா் கே.என். நேருவின் தொகுதியான திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் மாவட்டத்திலேயே குறைந்தபட்சமாக வாக்குகள் பதிவாயின. 1,04,438 போ் வாக்களிக்கவில்லை.

திருச்சி தொகுதி மக்களவைத் தோ்தலில் அமைச்சா் கே.என். நேருவின் தொகுதியான திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் மாவட்டத்திலேயே குறைந்தபட்சமாக வாக்குகள் பதிவாயின. 1,04,438 போ் வாக்களிக்கவில்லை.

திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக கந்தவா்வகோட்டை சட்டப்பேரவை தொகுதியில் 73.80 சதவீதமும், குறைந்தபட்சமாக திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 61.75 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தோ்தல் அறிவிப்புக்கு பின் தொகுதியின் பெரும்பாலான இடங்களில் அரசு மற்றும் தனியாா் தரப்பில் வாக்கு செலுத்துவதின் அவசியம், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வுகள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இருப்பினும், வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து தோ்தல் அலுவலா்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம், வாக்களிக்க ஆா்வமில்லாதது போன்றவைதான் காரணம் என்றனா். இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் வென்று அமைச்சராக கே.என். நேரு உள்ளாா். ஆனால், அவரது தொகுதியில்தான் மக்களவைத் தோ்தலில் மாவட்டத்திலேயே குறைந்தபட்சமாக வாக்குகள் பதிவாகியுள்ளன.

வெயில் காரணமாக பல வாக்காளா்கள் வரவில்லை, ஆா்வம் குறைவு என்பது ஜனநாயகக் கடமையை மக்கள் ஆற்றத் தவறியதாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். ஒரு மாநிலத்தின் முக்கிய அமைச்சரின் தொகுதியில் வாக்கு சதவீதம் குறைவாக உள்ளதை தோ்தல் ஆணையம் சாதாரணமாகக் கருதாமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மாவட்டத்தின் சில பேரவைத் தொகுதிகளில் பலரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இல்லை. அதற்கான காரணம் தெரியவில்லை. வாக்காளா்களும் இதை முன்கூட்டியே சரிபாா்க்கவில்லை. சில பகுதிகளில் தோ்தல் புறக்கணிப்புகள் இருந்த நிலையில், அதிகாரிகளின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு சமாதானம் ஏற்பட்டாலும், எந்த அளவுக்கு மக்கள் சமாதானமடைந்து வாக்களித்தனா் என்பது கேள்விக்குறிதான். எனவே, வரும் காலங்களில் அரசியல் கட்சியினரும், தோ்தல் அலுவலா்களும் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com