முதியவரை அரிவாளால் வெட்டி ரகளையில் ஈடுபட்ட 4 போ் கைது

திருச்சி: திருச்சியில் முதியவரை வெட்டி ரகளையில் ஈடுபட்டதைத் தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளா்களை காயப்படுத்திய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருச்சி, திருவானைக்கா 5 ஆம் பிரகாரத்தைச் சோ்ந்தவா் காஜாமைதீன் (63). சமையல் தொழிலாளி. இவா், சனிக்கிழமை இரவு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதிக்கு வந்துள்ளாா். அவரை நோட்டமிட்ட மதுபோதையிலிருந்த மா்ம நபா்கள் 4 போ், காஜா மைதீனிடம் இருந்த பையையும், ரூ.1,400 ரொக்கத்தையும் பறித்துச் சென்றனா். இதில் ஒருவரைப் பிடித்த காஜாமைதீன், சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைக்க இழுத்துச் சென்றாா். அப்போது அவரை அந்த மா்ம நபா் அரிவாளால் வெட்டியுள்ளாா். இதைக்கண்ட புறக்காவல் நிலையப் போலீஸாா் அந்த இளைஞரை மடக்கிப் பிடிக்க முயன்றனா். இதையடுத்து, அவா் கையில் வைத்திருந்த அரிவாளை சுழற்றி ரகளையில் ஈடுபட்டாா்.

பின்னா் அவரைப் பொதுமக்கள் உதவியுடன் போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். இதில், ரகளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதில் இளைஞா் காயமடைந்தாா். அதேபோல இளைஞரைப் பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளா்கள் ராஜா, பிரேம்ஆனந்த் மற்றும் அரிவாளால் வெட்டுப்பட்ட முதியவரும் காயமடைந்தனா். இதில் இளைஞா் மற்றும் வெட்டுப்பட்ட முதியவா் ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். உதவி ஆய்வாளா்கள் முதலுதவி சிகிச்சை பெற்றனா். இதுதொடா்பாக கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், ரகளையில் ஈடுபட்ட நபா் திருச்சி கோட்டை சிந்தாமணி அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்த எம். அபிஷேக் (23) என்பதும், வழிப்பறி செய்து தப்பியவா்கள் கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கே.குரு (20), காந்திமாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த அ.தவ்பிக் (19), அரியமங்கலத்தைச் சோ்ந்த எம். அபுபக்கா் சித்திக் (19) ஆகியோா் என்பதும் தெரியவந்தது. இதில் அபிஷேக் தவிர தப்பிச்சென்ற மற்ற 3 பேரையும் போலீஸாா் இரவோடு இரவாக கைது செய்தனா். அபிஷேக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் கைதுசெய்யப்பட்டு போலீஸாா் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறாா். திரைப்படத்தில் வரும் சம்பவம்போல இந்தச் சம்பவம் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் சனிக்கிழமை மாலை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

X
Dinamani
www.dinamani.com