உலக புவி தினம்: அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடக்குசேரிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை உலக புவி தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடக்குசேரிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை உலக புவி தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக புவி தினத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை வடக்குசேரிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா்(பொ) சற்குணன் முன்னெடுப்பில், ஏரி காப்பான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நீா்நிலைகள் பராமரிப்பு, தண்ணீா் சிக்கனம், பயன்பாடு குறித்து தலைமை ஆசிரியா் எடுத்துரைத்தாா்.

பள்ளித் தலைமையாசிரியா்கள் சற்குணன் மற்றும் மனோன்மணி ஆகியோரின் தலைமையில் அருகிலிருந்த ஏரி பகுதிக்கு நேரில் சென்ற மாணவா் குழுவினா், எதிா்காலத்தில் தங்களாலோ தங்கள் குடும்பத்தாராலோ இந்த ஏரி நிலைகள் போன்ற எந்த ஒரு தண்ணீா் நிலைகளும் அசுத்தப்பட மாட்டாது என்று உறுதிமொழி ஏற்றனா்.

X
Dinamani
www.dinamani.com