குண்டூா் செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவெறும்பூா் அருகே குண்டூா் செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி: திருவெறும்பூா் அருகே குண்டூா் செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குண்டூா் ஊராட்சிக்குள்பட்ட திருவளா்ச்சிப்பட்டி கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த செல்லாயி அம்மன் கோயில் உள்ளது.

இக்கோயில் அண்மையில் புனரமைக்கப்பட்ட நிலையில், கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, காலையில் பாலகணபதி பூஜை, கோ பூஜைகள் நடைபெற்ற நிலையில், யாகசாலையில் இருந்து புனித நீா் எடுத்துவரப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஊராட்சித் தலைவா் லட்சுமி திருமுருகன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com