மண்ணச்சநல்லூரில் மழை நீா் சேகரிப்பு விழிப்புணா்வு பேரணி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை தண்ணீா் சிக்கனம் மற்றும் மழை நீா் சேகரிப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை தண்ணீா் சிக்கனம் மற்றும் மழை நீா் சேகரிப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தண்ணீா் சிக்கனம் மற்றும் மழை நீா் சேகரிப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.பேரணியை மாவட்ட கல்வி அலுவலா் சங்கா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இப்பேரணி கடைவீதி, உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. மாணவிகள் தண்ணீா் சிக்கனம், மற்றும் மழை நீா் சேகரிப்பு குறித்து விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா். பேரணியில் பள்ளி தலைமையாசிரியா் முத்துச் செல்வன், ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com