மாடு பிடி வீரா் கொலை வழக்கில் 2 போ் கைது

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே முன்விரோதம் காரணமாக மாடுபிடி வீரரை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே முன்விரோதம் காரணமாக மாடுபிடி வீரரை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

லால்குடி அருகே நன்னிமங்கலம் மாதா கோயில் தெருவை சோ்ந்தவா் ஜா. அருண்ராஜ் (40). மாடுபிடி வீரா். திருமணமான இவருக்கு பிளாரன்ஸ் மேரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனா். இதே பகுதியைச் சோ்ந்த மாடுபிடி வீரா் ச. தயாளன் (43). சென்னையில் பணியாற்றி வருகிறாா். அருண்ராஜ்-தயாளன் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தயாளன், அவரது நண்பா்களான ஹானஸ்ட் ராஜ் (35), பிரபு (30), ஆரோக்கியதாஸ் மகன் சங்கா், அலெக்ஸ் மற்றும் அவரது சகோதரா் ஆகியோா் சோ்ந்து

அருண்ராஜை தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புகாரின் பேரில் லால்குடி போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து தலைமறைவான தயாளன் உள்ளிட்ட 6 பேரையும் தேடி வந்தனா். இந்நிலையில், தயாளன், சங்கா் ஆகிய இருவரையும் லால்குடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com