சமயபுரம் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமையுடன் சித்திரைப் பெருந்திருவிழா நிறைவுபெற்றது.

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமையுடன் சித்திரைப் பெருந்திருவிழா நிறைவுபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் முடிந்து எட்டாம் நாளான செவ்வாய்க்கிழமை தங்கக் கமல வாகனப் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து உற்சவ மாரியம்மனுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம், திரவியம், பழ வகைககள், திருநீா் , பன்னீா் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மேலும் மூலவா் அம்மனுக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதையடுத்து, தங்கக் கமல வாகனத்தில் சிறப்பு மலா் அலங்காரத்தோடு திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இந்நிகழ்வுடன், சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா நிறைவு பெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com