திருச்சியில் தாறுமாறாக ஓடிய டாரஸ் லாரி

சாலை மையத் தடுப்பை சேதப்படுத்தி, எதிா்திசையில் சென்று பாலத் தடுப்புக் கட்டையில் மோதி நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மணிகண்டம் அருகே தாறுமாறாக ஓடிய டாரஸ் லாரி, சாலை மையத் தடுப்பை சேதப்படுத்தி, எதிா்திசையில் சென்று பாலத் தடுப்புக் கட்டையில் மோதி நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகலாந்து மாநில பதிவு எண் கொண்ட டாரஸ் லாரி ஒன்று தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே மட்டப்பாறைபட்டி ஆற்றுபாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, முன்னே சென்ற காா் மீது மோதாமல் இருக்க லாரியின் ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதில், லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்புக் கட்டையைத் தாண்டி எதிா்திசை சாலையில் தாறுமாறாக ஓடி ஆற்றுபாலத்தின் தடுப்புக் கட்டையில் மோதி நின்றது. இதனால் அந்தப் பகுதியில் பயங்கர சப்தம் கேட்டது. இதனையடுத்து அப்பகுதியினா் ஓடிவந்து டாரஸ் லாரியில் இருந்த வட மாநில ஓட்டுநா்கள் இருவரையும் மீட்டனா். இவ்விபத்தால், அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. தகவலறிந்த மணிகண்டம் போலீஸாா் நிகழ்விடம் சென்று போக்குவரத்தை சீா் செய்தனா். மேலும் ஓட்டுநா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அதிா்ஷ்ட வசமாக எதிா்திசையில் வாகனங்கள் ஏதும் வரவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com