தொட்டியத்தில் வேளாண் மாணவா்கள் விழிப்புணா்வுப் பேரணி

தொட்டியம் அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தில் உலக பூமி தின விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொட்டியம் அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தில் உலக பூமி தின விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துறையூா் இமயம் வேளாண்மை கல்லூரி மற்றும் முசிறி எம் ஐ டி வேளாண்மை கல்லூரி மாணவ மாணவிகள் குழுவினா் பாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுடன் உலக பூமி தினத்தை முன்னிட்டு பூமி மாசுபடுவதை குறைக்கும் விதமாக பாலசமுத்திரம் கிராம முக்கிய வீதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தியபடி பேரணியாகச் சென்றனா். இதில் பலகைகள் மற்றும் வரைபடம் மூலமாக வரைந்து பூமி மாசு ஏற்படுவதைத் தடுப்பது குறித்து காட்சிப் படுத்தியிருந்தனா். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மு.கீதா ராணி அவா்கள் தலைமை வகித்தாா். இதில் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com