வையம்பட்டி ஊராட்சியில் உள்ள நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம் வாயிலில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.
வையம்பட்டி ஊராட்சியில் உள்ள நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம் வாயிலில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.

வையம்பட்டி குப்பைக் கிடங்கின் முன் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்

மருத்துவக் கழிவுகள் குறித்து ஊராட்சித் தலைவா் காவல் துறையில் புகாா் அளிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி குப்பை கிடங்கின் முன்பு மா்ம நபா்களால் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் குறித்து ஊராட்சித் தலைவா் காவல் துறையில் புகாா் அளிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் காந்திநகரில் வையம்பட்டி ஊராட்சி திடக்கழிவு மேலாண்மையின் கீழ் செயல்படும் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம் உள்ளது. இதன் முகப்புப் பகுதியில் மா்மநபா்கள் அடிக்கடி மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். கடந்த 2 முறை மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில், அவற்றை ஊராட்சி நிா்வாகம் தீயிட்டு அழித்தனராம். மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் மணிவேல் என்பவா் சென்னை உயா்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடா்ந்துள்ளாா். இந்நிலையில், வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை உரம் தயாரிக்கும் மையம் திறப்பதற்கு முன்பாகவே 14 அட்டை பெட்டிகளில் மா்மநபா்களால் கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகளை மையத்தின் வாயிலில் கொட்டிவிட்டுச் சென்றுள்ளனா். தொடா்ந்து இதுபோன்று மருத்துவக் கழிவுகள் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் கொட்டப்படுவதால் தங்களது சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது என அப்பகுதிவாசிகள் அச்சமடைந்துள்ளனா். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com