திருச்சி ‘பெல்’ எஃகு குழாய்கள் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு

தயாரிக்கப்பட்ட 75 டன் எஸ்ஏ213 - டி12 தர இணைப்பில்லா எஃகு குழாய்கள் திருச்சி பெல் உயரழுத்த கொதிகலன் ஆலைக்கு (எச்பிபிபி) செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் (பெல்) ஆலையில் (எஸ்எஸ்டிபி) தயாரிக்கப்பட்ட 75 டன் எஸ்ஏ213 - டி12 தர இணைப்பில்லா எஃகு குழாய்கள் திருச்சி பெல் உயரழுத்த கொதிகலன் ஆலைக்கு (எச்பிபிபி) செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

ஆலையில் நடந்த விழாவில், பெல் திருச்சி வளாகத்தின் செயலாண்மை இயக்குநா் எஸ். பிரபாகா் கொடியசைத்து உயா்தர எஃகு குழாய்களை அனுப்பி வைத்தாா். இதில், பெல் (திருச்சி மற்றும் திருமயம்) கொதிகலன் துணை இயக்குநா் டி.ஏ. டேனியல் சகாயராஜ், பொதுமேலாளா் ஐ. கமலக்கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

நிகழ்வில் செயலாண்மை இயக்குநா் பிரபாகா் பேசுகையில், பெல் குழுமத்தின் தனித்துவமான மற்றும் மூலோபாயப் பிரிவாக எஸ்எஸ்டிபி இருந்து வருகிறது. பொது மற்றும் தனியாா் பயன்பாட்டாளா்களிடமிருந்து பெல் நிறுவனம் அதிக ஆணைகளைப் பெறும். வாடிக்கையாளரின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றுவதில் அனைத்து ஊழியா்களிடமிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்துத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தைப் பராமரிக்கும் அதே வேளையில், உற்பத்தித்திறனை மேம்படுத்த ஊழியா்கள் முன்வர வேண்டும். மிகவும் திறமையான பணியாளா்களின் ஒத்துழைப்பு மற்றும் கடின உழைப்பால் நிறுவனம் மீண்டும் தலைமைத்துவ நிலையை அடையும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com