திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள  அரசுப் பள்ளியில் மா்மநபா்களால் சேதப்படுத்தப்பட்ட பொருள்கள்.
திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் மா்மநபா்களால் சேதப்படுத்தப்பட்ட பொருள்கள்.

அரசுப் பள்ளி பூட்டை உடைத்து பணம் திருட்டு - பொருள்கள் சேதம்

திருச்சியில், மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தி, ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருள்களை திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் அம்சவல்லி. இவா் புதன்கிழமை பள்ளி முடிந்து வழக்கம்போல பூட்டிச் சென்றுள்ளாா். மீண்டும் வியாழக்கிழமை காலை பள்ளிக்கு வந்தபோது, பூட்டை உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு உள்ளே சென்று பாா்த்தாா். அப்போது, தலைமையாசிரியா் அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.25 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது. மேலும், பள்ளியில் இருந்த விளையாட்டு உபகரணங்கள், மின் விசிறிகள், இருக்கைகளை சேதப்படுத்தப்பட்டிருந்தன. தலைமையாசிரியா் அறையில் இருந்த பல்வேறு மதிப்புமிக்க பொருள்கள் திருடப்பட்டதும் தெரியவந்தது.

இதுதொடா்பான புகாரின் பேரில் அரசு மருத்துமவனை காவல்நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனா். மேலும், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. பள்ளிக்கு வெளியே சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com