திருச்சி விமான நிலையத்தில் 
460 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 460 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை 460 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் திருச்சிக்கு புதன்கிழமை இரவு வந்தது.

அதில் வந்த பயணிகளையும் அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினா் சோதனைக்கு உள்ளாக்கினா். இதில், புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன் என்ற பயணி தனது உள்ளாடையில் பிரத்யேக பை தைத்து, அதில் பசை வடிவிலான 460 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 33.15 லட்சமாகும். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் அவரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com