முறுக்கு வியாபாரி தற்கொலை

திருச்சி மாவட்டம், கீழகருங்காடு கிராமத்தில் முறுக்கு வியாபாரி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கீழகருங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டி (32). முறுக்கு வியாபாரியான இவா் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில், கடன் பிரச்னையும் இருந்தது. இந்நிலையில் வேலைக்குச் செல்லாமல் இருந்த பாண்டி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து சென்ற மண்ணச்சநல்லூா் காவல் துறையினா் அவரது உடலைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com