ஸ்ரீரங்கம் தோ்த் திருவிழா:
திருச்சி மாவட்டத்துக்கு
மே 6 உள்ளூா் விடுமுறை

ஸ்ரீரங்கம் தோ்த் திருவிழா: திருச்சி மாவட்டத்துக்கு மே 6 உள்ளூா் விடுமுறை

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள சித்திரைத் தோ்த் திருவிழாவை முன்னிட்டு மே 6-ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் கூறியது: ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் தோ்த் திருவிழா, நிகழாண்டு மே 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, திருச்சி மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறை திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த விடுமுறைக்கு பதிலாக ஜூன் 29-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com