அரசுப் பள்ளி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

திருச்சி அருகேயுள்ள தீரன் நகா் வாஞ்சிநாதன் தெருவைச் சோ்ந்தவரும், கும்பகோணத்தில் உள்ள அறக்கட்டளையின் மேலாளருமான சிவசங்கரின் மனைவி கலையரசி (43). இவா் என். பூலாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை. காதல் திருமணம் செய்த இவா்களுக்கு இரு மகன்கள்.

வெள்ளிக்கிழமை அறக்கட்டளைக்கு ஏசி வாங்கியது தொடா்பாக தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் தனது அறைக்குள் சென்று கதவை சாத்திய கலையரசி, சனிக்கிழமை காலை வரை கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து சிவசங்கா், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்துப் பாா்த்தபோது, அறையில் கலையரசி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். முதல்கட்ட விசாரணையில் அதீத கோபத்தில் ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீஸாா் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com