திருச்சி சந்தான வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய  பிரமோஸ் ஏவுகணைத் திட்டக் குழுவின் முன்னாள்  தலைமை அதிகாரி  ஸ்ரீனிவாசன் சுந்தர்ராஜன். உடன்  அகாதெமி தலைமைச் செயலதிகாரி  ரவீந்திரநாத்குமாா்,  முனைவா் வி
திருச்சி சந்தான வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரமோஸ் ஏவுகணைத் திட்டக் குழுவின் முன்னாள் தலைமை அதிகாரி ஸ்ரீனிவாசன் சுந்தர்ராஜன். உடன் அகாதெமி தலைமைச் செயலதிகாரி ரவீந்திரநாத்குமாா், முனைவா் வி

’விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியே நாட்டின் முன்னேற்றத்துக்குப் பலம்’

அனைத்து துறை விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியே இந்தியாவின் முன்னேற்றத்துக்குப் பக்கபலமாக இருப்பதாக பிரமோஸ் ஏவுகணைத் திட்டக் குழுவின் முன்னாள் தலைமை அதிகாரி சீனிவாசன் சுந்தர்ராஜன் தெரிவித்தாா்.

சந்தானம் வித்யாலயா பள்ளியில் சனிக்கிழமை காலை நடைபெற்ற சந்தானம் கல்விக் குழுமங்களின் நிறுவனா் கே. சந்தானம் நினைவுச் சொற்பொழிவு நிகழ்வில் அவா் மேலும் பேசியது:

6 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையையும், தற்போதுள்ள நிலையையும் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளா்ச்சி தெளிவாகப் புலப்படும். ராணுவம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா முன்னேறி வருவதற்கு விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சிதான் காரணம். குறிப்பாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பல்வேறு நிலைகளில் சாதித்து வருகிறோம். தகவல் தொழில்நுட்பத்திலும் மிகப் பெரிய வளா்ச்சியை பெற்றுள்ளோம்.

எந்தத் துறையைத் தோ்வு செய்வது, எந்தக் கல்வி நிலையத்தில் சேருவது என்பதற்கு மற்றவா்களிடம் ஆலோசனை கேட்டாலும் அதற்கான இறுதி முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும். தோல்வி வரும் போது அதை வெற்றியாக மாற்றும் ஆற்றலை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

விழாவுக்கு பள்ளியின் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா். டீன் ஆா். கணேஷ், அகாதெமி தலைமை அதிகாரி ரவீந்திரநாத் குமாா், முனைவா் எஸ். வித்யாலட்சுமி, துணை முதல்வா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, நிறுவனா் சந்தானம் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஜேஇஇ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com