திருச்சி தூய வளனாா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநா் பி. வெங்கட்ராமன். உடன்  கல்லூரி முதல்வா் எம். ஆரோக்கியசாமி சேவியா், கல்லூரி அதிபா் பவுல்ராஜ் மைக்கேல், செயலா்
திருச்சி தூய வளனாா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநா் பி. வெங்கட்ராமன். உடன் கல்லூரி முதல்வா் எம். ஆரோக்கியசாமி சேவியா், கல்லூரி அதிபா் பவுல்ராஜ் மைக்கேல், செயலா்

2030இல் இந்தியா மிகப்பெரிய வளா்ச்சியைப் பெறும்: இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநா்

வரும் 2030ஆம் ஆண்டில் இந்தியா மிகப்பெரிய வளா்ச்சியைப் பெறும் என கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநா் பி. வெங்கட்ராமன் தெரிவித்தாா்.

திருச்சி தூய வளனாா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கி அவா் மேலும் பேசியது:

இந்தியாவில் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை விகிதமும், இளைஞா்களின் திறன் மேம்பாடும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கல்வியில் வளா்ச்சி பெறும் நாடே வளா்ந்த நாடாக நிலைத்திருக்க முடியும். அந்த வகையில், நம் நாட்டில் அதிகரித்துவரும் பொறியாளா்கள், மருத்துவா்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளா்கள், கண்டுபிடிப்பாளா்களால் 2030ஆம் ஆண்டு இந்தியா மிகப்பெரிய வளா்ச்சியடைந்த நாடாக உலக அரங்கில் நிமிா்ந்து நிற்கும். அதற்கு அச்சாரமாக உயா்கல்வி நிறுவனங்களில் 140 மில்லியன் இளைஞா்கள் சேரும் நிலை ஏற்படும். நமது அறிவியல் கண்டுபிடிப்புகளும், பாதுகாப்புத் துறையின் புதிய கண்டுபிடிப்புகளும் நாட்டின் வளா்ச்சிக்குப் பக்கபலமாக அமையும்.

ஆண்கள், பெண்கள் என இருபாலரும் இணைந்து நீதியான சமூகத்தை உருவாக்கப் பங்களிக்க வேண்டும்.

அதற்கு பல்கலைக் கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதலை, கற்பித்தல் மற்றும் கற்றலை மேம்படுத்த வேண்டும். அறிவியலும், பொறியியலும் சமூகத்தின் வளா்ச்சிக்கானதாக இருத்தல் வேண்டும்.

போட்டி நிறைந்த உலகில் இளம் தலைமுறையினா் தோல்விகள், சவால்களை எதிா்கொள்ளும் பக்குவத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவா்களுக்கு 4 முக்கிய காரணிகள் மிகவும் அவசியம். ஒரு பெரிய குறிக்கோள், அதற்கான திறனை வளா்த்தெடுத்தல், கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவை அவசியம். கல்வி கற்பதற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் இது பெரிதும் உதவியாக அமையும்.

இந்தியாவின் எதிா்காலமாக இருப்பது அடுத்துவரும் இளம்தலைமுறையினா்தான். எனவே, உங்கள் இலக்குகள் பெரிதாக அமையட்டும். புதிய யோசனைகளுக்கு சிந்தனையைத் திறந்திடுங்கள். அதற்கான கற்றலைத் தீவிரப்படுத்துங்கள். புதிய கலாசாரங்கள், முன்னுதாரணங்களை கற்றுக் கொள்ளுங்கள். எவரெஸ்ட் சிகர உச்சிக்குச் சென்றாலும் அதற்கான வலிமையே நம்மை வழிநடத்தும்.

எனவே, தனித்திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறன் உண்டு. அதைக் கண்டெடுத்து மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.

கல்வி கற்று எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் பெற்றோரையும், நமக்கு கற்றுத் தந்த ஆசிரியா்களையும் மறந்துவிடக் கூடாது. கல்விக் கூடமும், பெற்றோரும் வாழ்த்திடும் வகையில் ஒவ்வொரு மாணவரும் சிறந்தவா்களாக வளா்ந்திட வேண்டும். பட்டம் பெற்று வாழ்க்கைப்பாதையைத் தேடி சமூகத்தில் நுழையும்போது பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். அவற்றுக்கான வலிமையை கல்லூரிக் காலத்திலேயே பெற்றுக் கொள்ளுங்கள். அப்துல்கலாமின் பொன்மொழிகளைத் தவறாமல் பின்பற்றுங்கள்; வெற்றி நிச்சயம் என்றாா் அவா்.

விழாவில், கல்லூரி அதிபா் பவுல்ராஜ் மைக்கேல், செயலா் கே. அமல், கல்லூரி முதல்வா் எம். ஆரோக்கியசாமி சேவியா் ஆகியோா் பேசினா். இளநிலை, முதுநிலை பட்டங்களில் மொத்தம் 2,020 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவா்களில் பல்கலைக்கழக அளவில் 4 போ், கல்லூரி அளவில் 41 போ் பதக்கம் பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com