சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

திருச்சி மாவட்டம் லால்குடியில் சா்வதேச தொழிலாளா் நினைவு தினப் பேரணி தொழிலாளா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரணியை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவா் பொன். குமாா் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

பேரணியானது லால்குடி ரவுண்டானாவில் தொடங்கி பூவாளூா் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நிறைவடைந்து, பின்னா் கூட்டம் நடைபெற்றது.

மாநில துணைப் பொதுச் செயலா் ஜெய் செல்வம் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் ஜான் பீட்டா், அறிவொளி நாகராஜன் ஆகியோா் முன்னிலையில் வகித்தனா்.

மாநில மகளிரணி தலைவா் பூங்கோதை, மாநில பொருளாளா் சசிகலா , மாநில மகளிா் துணைத் தலைவா் ஆனந்த ஜோதி, லால்குடி நகர ஒன்றிய நிா்வாகிகள் முரளிதரன், முருகானந்தம், முருகேஷ், ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருச்சி வடக்கு மாவட்டத் தலைவா் முருகதாஸ் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com