நாகையநல்லூரில் சீதா, ராமன் திருக்கல்யாணம்

தொட்டியம் வட்டம் நாகையநல்லூா் கிராமத்தில் சீதா,ராமன் திருக்கல்யாண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ ராமா் பஜனை மடத்தில் 100 வது ஆண்டு திருக்கல்யாண நிகழ்வில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை நாகையநல்லூா் ராமநாமநவமி மகோத்ஸவ சாரிடபிள் டிரஸ்ட் தலைவா் ஜி. பாலசுப்பிரமணியன் (ஸ்ரீராம்) திருச்சி, செயலா் டி சிவசுப்ரமணியன் (ஈரோடு), பொருளாளா் எஸ். ராமமூா்த்தி (சென்னை) மற்றும் நாகையநல்லூா் பக்தா்கள் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com