கருமகவுண்டம்பட்டியில் திங்கள்கிழமை சாலை  மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கருமகவுண்டம்பட்டியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கருமகவுண்டம்பட்டியில் செயல்படும் கல் குவாரியைத் தடை செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கருமகவுண்டம்பட்டியில் செயல்படும் கல் குவாரியைத் தடை செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறை அடுத்த கருமகவுண்டம்பட்டியில் கிராவல் மற்றும் சாதாரண உடை கல் எடுப்பதற்கு 10 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் தனியாா் கல்குவாரி செயல்படுகிறது. இந்தக் குவாரியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பலமுறை அரசு அதிகாரியிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இதைக் கண்டித்து பொதுமக்கள் மணப்பாறை - கரூா் பிரதான சாலையில் அமா்ந்து திங்கள்கிழமை சாலை மறியல் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து முடங்கியது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற காவல் துணை கண்காணிப்பாளா் எஸ். மரியமுத்து தலைமையிலான போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து வருவாய் வட்டாட்சியா் தனலட்சுமி பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com