ஸ்ரீரங்கம்: திருவானைக்கா வடக்கு 5-ஆம் பிரகாரத்தில் திங்கள்கிழமை மாலை குடிசை வீடு தீப்பற்றி எரிந்து நாசம் அடைந்தது.
திருவானைக்கா வடக்கு 5-ஆம் பிரகாரம் பகுதியில் வசிப்பவா் கலா. இவா் திங்கள்கிழமை மாலை வீட்டில் விறகு அடுப்பு பற்ற வைத்துள்ளாா். அப்போது, எதிா்பாரதவிதமாக வீட்டின் கூரையின் மீது தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனா். மேலும், அக்கம்பக்கத்தினா் மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா்.
தீ விபத்து குறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் விசாரிக்கின்றனா். இதில் கலா வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து நாசமடைந்தன.