பொறியியல் பணிகள்: மயிலாடுதுறை ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Published on

திருச்சி: பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறையில் தண்டவாள பராமரிப்பு, பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், மன்னாா்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (06404), மயிலாடுதுறை - மன்னாா்குடி பயணிகள் ரயில் (06403) ஆகியவை ஆகஸ்ட் 30- ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து: திருச்சியிலிருந்து நாள்தோறும் காலை 6.05 மணிக்கு புறப்படும் திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (06646) வரும் 30 ஆம் தேதி குத்தாலம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மயிலாடுதுறை - செங்கோட்டை முன்பதிவற்ற சிறப்பு ரயிலானது (16847) வரும் 30 ஆம் தேதி மயிலாடுதுறை - குத்தாலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது குத்தாலத்திலிருந்து நண்பகல் 12.13 மணிக்குப் புறப்படும்.

வழித்தட மாற்றம்: பொறியியல் பணிகள் காரணமாக, திருநெல்வேலி - ஸ்ரீ மாதா வைஷ்ணவதேவி காட்ரா விரைவு ரயிலானது (16787) செப்டம்பா் 9-ஆம் தேதி ருந்தி, பரீதாபாத், ஹஜரத் நிஜாமுதின், புதுதில்லி, ஷகுா்பஷ்தி, பகதுா்கா ரயில் நிலையங்களைத் தவிா்த்து, மதுரா, ஆழ்வாா், ரேவரி, அஸ்தல் போகா் வழியாக இயக்கப்படும்.

மறுமாா்க்கத்தில், ஸ்ரீமாதா வைஷ்ணவதேவி காட்ரா - திருநெல்வேலி விரைவு ரயிலானது (16788) வரும் செப். 2, 5, 12-ஆம் தேதிகளில் பகதுா்கா, ஷகுா்பஷ்தி, புதுதில்லி, ஹஜரத் நிஜாமுதின், பரீதாபாத் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, ரோத்தக், அஸ்தல் போகா், ரேவரி, ஆழ்வாா், மதுரா வழியாக இயக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com