லால்குடி - திருக்காட்டுப்பள்ளி இடையே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்
லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடியிலிருந்து கோமாக்குடி வழியாக திருக்காட்டுப்பள்ளி வரை செல்லும் அரசுப் பேருந்து சேவையை எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
லால்குடியிலிருந்து காட்டூா், கோமாகுடி, ஆலங்குடி மகாஜனம், திருக்காட்டுப்பள்ளி வழித் தடத்தில் பேருந்து இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதன்பேரில், அரசு போக்குவரத்து கழக லால்குடி கிளையிலிருந்து புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையின் தொடக்க விழா கோமாக்குடி கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
லால்குடி கிளை மேலாளா் பூபதி, உதவி பொது மேலாளா் சதீஷ் ஆகியோா் முன்னிலையில் லால்குடி எம்எல்ஏ அ. சௌந்தரபாண்டியன், புதிய வழித்தடத்திலான பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதற்கான நிகழ்ச்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.